17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கால் எலும்பு முறிந்த நிலையில் கல்குவாரியிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வேலூரை அடுத்த  புதுவசூர் மலையில்  முருகன் கோவில் செல்லும் பாதை உள்ளது .  அதன் அருகே கல்குவாரியில்  17 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.  அந்த பகுதியில் சென்றவர்கள்  இது குறித்து  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .  உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அந்தப் பெண் யார் என்பது குறித்து விசாரிக்க தொடங்கினார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்கள் குறித்து வந்த புகார்களை ஆராய்ந்தனர் .  அப்போது வேலூரை அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் நிவேதா அது என்பது தெரியவந்தது .  அவரது உடல் அழுகிய நிலையிலும்  அவரது வலது கால்  எலும்பு உடைந்து வெளியே தெரிந்த நிலையில் இருந்ததால் அவரின்  கையில் இருந்த டாட்டூவை அடையாளமாக வைத்து அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டனர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் நிவேதா வேலைக்கு சேர்ந்துள்ளார்.  அன்றாடம் வேலைக்கு சென்று வந்த நிவேதா கடந்த 14ஆம் தேதி வீடு திரும்பவில்லை ,  இரண்டு நாட்கள் கழித்து அவரது பெற்றோர்கள் மகள் காணாமல் போனது குறித்து  போலீசில் புகார் கொடுத்தனர்.  

இந்நிலையில் நிவேதா கொணவட்டத்தைச் சேர்ந்த வாலிபருடன் சில மாதங்களாக பழகி வந்ததாகவும் இந்நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.  அதே நேரத்தில் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு இளைஞருடன் நிவேதா பழகி வந்துள்ளார் .  இருவரில் ஒருவர் தம்மை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதாவை வற்புறுத்து  வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இளைஞர்  ஒருவர் நிவேதாவை  ரத்தனகிரி மலைக்கு அழைத்துச் சென்றதுடன் அங்கு  நிவேதாவுக்கும் அந்த இளைஞருக்கும்   ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞர் நிவேதாவை மலைமீது இருந்து கல்குவாரியில் தள்ளிவிட்டு  கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது  இது குறித்து தொடர்ந்து  போலீசார்  விசாரித்து வருகின்றனர் .