மானாமதுரை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி விலக்கு பகுதியில் காவலர் ஒருவர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் முழுவதும் எரிந்து இறுதியாக கால் பகுதி எரிந்துகொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.