திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி.குரும்பபட்டியை சேர்ந்த வெங்கடாசலம்  லட்சுமி தம்பதிகளுக்கு பிறந்த 12 வயதான சிறுமி கலைவாணி வடமதுரையில் உள்ள கலைமகள் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.  தற்போது விடுமுறை என்பதால் மாணவி கலைவாணி வீட்டில் இருந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 16 ம்தேதி மாணவி கலைவாணி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.  கலைவாணி குடும்பத்தினர் எஸ்பி சக்திவேலிடம் புகார் கொடுத்ததன் பேரில்  மாணவி கலைவாணியை பாலியல் பலாத்காரம்  செய்து படு கொலை செய்த காமக்கொடூரனான  பிளஸ்டூ மாணவன் கிருபானந்தனை போலீசார் கைது செய்தனர்.  

மேலும்,  ரத்த கரைந்த துணிமணிகளும் அவன் வீட்டில் இருந்ததை போலீசார் கைப்பற்றி அவனிடம் விசாரித்த போது; அண்ணா விட்டுங்க அண்ணா கரண்டு  எல்லாம் வைக்காதீங்க என்று கதறி துடித்தாள்,வெளியில் சொல்லிவிடுவாள் என்ற பயத்தில் நான் கரண்ட் வயரை பிடுநி வாயில், மூக்கில் சொருகி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்திருக்கிறான் இந்த காம வெறிபிடித்த மிருகம்.

பனிரெண்டு வயதான மாணவி சிறுமியை பாலியல்  மூலம் மின்சாரம் தாக்கி படுகொலை செய்யப்பட்டது எப்படி?  கலைவாணியின் தாய் லட்சுமி கண்ணீரோடு கூறியிருக்கிறார். அதில்,  சம்பவத்தன்று மதியம்  என் மகளைக் கூட்டிக்கொண்டு போய்  ரேஷன்  கடையில் அரிசியை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றேன்.  

அப்போது என்னோட வேலை செய்யற இடத்துல வந்து உட்கார்ந்துக் இரும்மா என்று வா என கூப்பிட அதற்கு அவள், வேணாமா நான் டிவி பார்த்துகிட்டு இருக்கிறேன் என்று சொன்னதால்  நானும் என் மகளை வீட்டில் விட்டுட்டு போய், வேலையை முடித்து விட்டு மாலை வந்து வீட்டுக்குள் பார்த்த போது வீடு திறந்து கிடந்தது.   

ரூமை திறந்து பார்த்தபோது அங்கங்கே ரத்தம் கிடந்தது.  அதன் அருகே அலங்கோலமாக என்  மகள் கிடந்ததை கண்டு கதறித் துடித்த வாரே என் மகளை பார்த்த போது வாயிலையும், மூக்குலயும் மின்சாரக்கம்பி சொருகி அதனுடைய வயர் அருகிலிருந்த பிளக்கில் மாட்டி இருந்ததின் மூலம் தீ கங்கும்  வந்து கொண்டிருந்தது. உடனே சுச்சு ஆப் பண்ணி விட்டு என் மகளின் மூக்கிலும் வாயிலும் இருந்த வயர்களை உருவியும் கூட உருவ முடியாமல் கஷ்டப்பட்டு உருவி விட்டு என்மகளை தூக்கிய போது தலை எல்லாம் ரத்தமாக இருந்தது.

அந்த அளவுக்கு அந்த படுபாவி என் மகளை சீர் அழித்து விட்டு, சுவற்றில்  தலையை முட்டியும்,  போர்வையாழ் முகத்தில் அமுக்கியும் கலைவாணி உயிருடன் தான் இருந்திருக்கிறாள். அதன் பிறகு தான் அந்த படுபாவி அருகே கிடந்த டீப் லைட்டில் இருந்த வயரை உருவி கரண்ட் ஷாக் கொடுத்து என் தங்க மகளை கொலை செய்து விட்டு ஓடிவிட்டான் என் மகளை சீரழித்து கொன்ற அந்த படுபாவிக்கு  அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார்.