Asianet News TamilAsianet News Tamil

அப்பாவி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காதல் ஜோடி...மொத்தமாக சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன பயங்கரம்!!

பணம் மோசடி செய்ய, பல அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை  சீரழித்தாது மட்டுமில்லாமல், அவர்களின் பணத்தையும் ஆட்டையை போட்டுக்கொண்டு எஸ்கேப் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young couple dupes 54 people on pretext of providing job in British Airways
Author
Bangalore, First Published Sep 17, 2019, 1:07 PM IST

பணம் மோசடி செய்ய, பல அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை  சீரழித்தாது மட்டுமில்லாமல், அவர்களின் பணத்தையும் ஆட்டையை போட்டுக்கொண்டு 
எஸ்கேப் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே சிரவாடா பகுதியைச் சேர்ந்த மார்வின் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்வாரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் மூலம்  பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக விளம்பரம் செய்தார். விமானி, விமான பணிப்பெண் உள்பட பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும்,  இதற்காக தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக பல விளம்பரங்களை செய்துவந்தார்.

வாழ்க்கையில் எப்படியும் செட்டில் ஆகிவிடலாம் என நம்பிய அப்பாவி பெண்களும், இளைஞர்களும் மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 2 மாத பயிற்சியில்  ரூ.1½ லட்சம் செலுத்தி சேர்ந்தனர். இதையடுத்து எப்படியாவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலை வாங்க வேண்டும் என்ற ஆசையில் உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் பெண்கள் என மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களுடைய சேர்ந்தனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த ஹாசன், பெலகாவி, கோவா, உப்பள்ளி, பெங்களூரு பகுதியை சேர்ந்த மொத்தம் 54 பேர் மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சேர்ந்தனர். இதையடுத்து பயிற்சியானது தொடங்கவுள்ளதாக சொல்லி பயிற்சிக்கு சேர்ந்த 54 பேரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்கள். அங்கு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து 54 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று வந்த சாரா கான் என்பவரும், பேருக்கும் பயிற்சி அளித்தார்.

பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் உணவு, இருப்பிடம்,, சீருடை உள்பட அனைத்தும் வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளில் 54 பேரையும் சந்தித்த மார்வின், அவர்களின் விருப்பப்படி விமான நிலைய அலுவல், விமான பணிப்பெண் உள்ளிட்ட பதவிகளில் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். பின் ஒரு சில நாட்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரிட்டீஷ் விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்று, பணி நியமன ஆணைகளை கொடுத்து பணிக்கு சேர்ந்து கொள்ளலாம் என சொல்லிவிட்டு மார்வினும், சாராகானும் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 54 பேரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்திற்கு சீருடையுடன் வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணி நியமன ஆணைகளை கொடுத்து தாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் குழப்பம் அடைந்த அதிகாரிகள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் விசாரித்தார்கள். அப்போது தான் 54 பேரும் ஏமாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பெங்களூரு மடிவாளா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், மார்வினும், அவருடைய காதலியான அங்கீதா ராய்கரும் சேர்ந்து 54 பேரையும் ஏமாற்றி சுமார் ரூ.81 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்திருப்பது போலீசாருக்கு தெரியவர. இதில் கொடுமையான விஷயம் என்னன்னா? மார்வினின் காதலியான அங்கீதா ராய்கர் தான், சாரா கான் என்ற பெயரில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என சொல்லி 54 பேருக்கும் பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார். பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த இவர்கள், இப்போது வேலையும் இல்லாமல் பணத்தையும் இழந்து  வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios