கெத்து காட்டிய ரவுடியை தாயின் கண்முன்னே வெட்டி கொலை செய்த வழக்கில் சிறுவன்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூர், வியசார்பாடி பெரியார்நகர் இஸ்மாயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் ,  இவரது மகன் சந்தோஷ்குமார்(23) இவர் மீது செம்பியம், வியசார்பாடி, எம்.கே.பிநகர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த நிலையில், சந்தோஷ் குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது வீட்டுக்கு அருகே அம்பேத்கர் தெரு பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கியதும், சந்தோஸ் குமாரை வெட்ட தொடங்கினர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சந்தோஷ், பயந்து, உயிர் தப்ப அருகே இருந்த அவரது வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார். ஆனால், மர்ம கும்பல் அவரை துரத்தி சென்று, வீட்டிற்குள் புகுந்து  சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் முழ்கிய சந்தோஷ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.  இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.  இதுகுறித்து விசாரணை நடத்திய செம்பியம் போலீசார், 17 வயது சிறுவன், கொடுங்கையூரைச் சேர்ந்த ஹரிஹரன், 20, வியாசர்பாடியை சேர்ந்த நவீன், 22 உட்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தோஷ்குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களை மிரட்டி அடித்து துன்புறுத்தி வந்ததும்,  கடந்த 1 வாராகாலத்திற்கு முன்பு 17 வயது பார்த்திபன் என்ற சிறுவனை கடுமையாக அடித்ததில் காயமடைந்நத சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கெத்து காட்டி தொடர்ந்து அந்த பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்து  ஒன்று சேர்ந்து சந்தோஷ்குமாரை போட்டுத்தள்ளியதாக  தெரிவித்துள்ளனர் . தப்பி சென்று வீட்டில் மறைந்தவனை கத்தியல் தலை மற்றும் கைகளில் சராமாரியாக தாக்கியுள்ளனர்.  தடுக்க வந்த சந்தோஷின் தாய் மற்றும் சகோதிரியின் கண் முன்னே சம்பவம் நடைப்பெற்றுள்ளது . இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 1) ஹரிஹரன்/20, 
2) நவின்/22, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 3) தங்கராஜ்/23, வியசர்பாடியை சேர்ந்த 4) தங்கராஜ்,  5) புவனேஷ்குமார்,பெரம்பூரை சேர்ந்த 6) கார்த்திக், 7) சஞ்சய்,8) விக்னேஷ்/19 மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்ளீட்ட 9 பேரை கைது செய்த போலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.