பொதுமக்கள் கல்லூரி பேராசிரியையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் முழுவதும் தீ;ப்பற்றி எரிந்ததால் அங்கிதாவை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவளது பச்சிளம் குழந்தை தாய் பாலுக்கும் பாசத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் காண்போரை கண்கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

BY ; T.Balamurukan
மகாராஷ்டரா மாநிலத்தில் கல்லூரி பேராசிரியை மீது கதற கதற இளைஞன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. 


மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இயங்கி வரும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் தான் அங்கிதா பிகட் .இவருக்கு வயது 24. கல்லூரிக்கு எப்போதும் பஸ்சில் பயணம் செய்து ஹிங்கனா காட் பகுதியில் இறங்கி சிறிது தூராம் நடந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதை ரெம்ப நாட்களாகவே பார்த்து கொண்டு இருந்த இளைஞர் விக்கி நக்ரால் என்பவருக்கு அந்த கல்லூரி பேராசிரியை மீது காதல் வந்திருக்கிறது. தன்னுடைய காதலை ஒரு காதலனாக பேராசிரியையிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பேராசிரியை தனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இனிமேல் இதுபோன்று என் பின்னால் வருவதை நிருத்திக்கொள் என்று சொல்லி எச்சரிக்கை செய்திருக்கிறார்.


உடனே அங்கிருந்த பொதுமக்கள் கல்லூரி பேராசிரியையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் முழுவதும் தீ;ப்பற்றி எரிந்ததால் அங்கிதாவை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவளது பச்சிளம் குழந்தை தாய் பாலுக்கும் பாசத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் காண்போரை கண்கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.