திருமங்கலத்தில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல். கல்லூரி மாணவர்கள் இருவர் பலி. ஒருவர் படுகாயம்.வில்விவாக்கத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(20) , இவரது நண்பர்கள் விஜய்(17) , சதீஷ்(17) ஆகிய மூன்று பேரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது  திருமங்கலம் பாடி மேம்பாலம் மீது வேன் ஒன்று பழுதாகி நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் மோட்டார்சைக்கிள் வேகமாக வந்து வேனின் மீது மோதியதில் சம்பவ இடத்திலே விஜய் இறந்து போனார்.

 

அருகில் இருந்த பொதுமக்கள் திருமங்கலம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் உதவி ஆய்வாளர் கலைமணி மற்றும் போலீசார் இறந்துபோன விஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த பச்சைப்பன் கல்லூரி மாணவர் பிரசாந்த்னத மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். 

இதில் படுகாயமடைந்த சதீஷ் என்பவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.