பணி முடித்து இரவு தெரிந்த நபருடன் பைக்கில்  வந்த பெண் பாதிவழியில் மர்மமான முறையில் குளத்தில் சடலமாக  மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


 
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் இவரது மனைவி ஷோபனா, இவர்களுக்கு  திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது,  இந்நிலையில் ஷோபனா கடந்த 10  ஆண்டுகளுக்கும் மேலாக திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பியூட்டிசியனாக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் நேற்று அவரது குழந்தைக்கு பிறந்த தினம் என்பதால்,  திருச்செங்கோட்டில் உள்ள ஒரு துணிக் கடையில் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையிம் வந்தார் அனால் அவர் வருவதற்குள்  பேருந்து கிளம்பிவிட்டது. இதனையடுத்து தன் கணவருக்கு போன் செய்த அவர்,  பேருந்து  தவறவிட்டுவிட்டேன்,  தெரிந்த  நபருடன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்,  இரவு 8 மணிக்கெல்லாம் வந்துவிடுவேன் என கூறி கட்செய்துவிட்டார்.  ஆனால் இரவு 9 ஆகியும் அவர் வந்துசேரவில்லை.  இதனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஷோபனாவை தேடினர். 

போன் செய்து பார்த்ததில்,  அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதில் பதற்றமடைந்த அவர்கள் பல இடங்களில் ஷோபனாவை தேடியும் அவரை காணவில்லை.  இறுதியில் காவல்துறையை நாடினர் போலீசார் இரவு முழுக் தேடியும் அவரை  கண்டுபிடிக்கமுடியவில்லை. காலையில் பள்ளிபாளையம் என்ற இடத்தில் உள்ள ஒரு குட்டையில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று பார்த்தபோது அது நேற்றிரவு மாயமான ஷோபனா என தெரிந்தது. வேலைக்குச் சென்ற மனைவி சடலமாக கிடப்பதை கண்ட அவரது கணவர் செந்தில் மற்றும் உறவினர்கள் ஷோபனாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

 

ஷோபனா தன் மகனுக்காக ஆசையுடன் வாங்கிவந்த புத்தாடைகளும்  குட்டையில் சிதறிக்கிடந்தன. ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஷோபனா எப்படி இறந்தார்.?  நேற்று வாகனத்தில் அவரை அழைத்துவந்தவர் யார்.? இவருக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு.? ஷோபனா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டாரா.? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரத்துவருகின்றனர்.