தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்! ஒர்க் ஷாப் ஓனர் பகீர்.!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(52). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒர்க் ஷாப்பில் அருள்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
பொள்ளாச்சி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் ஒர்க் ஷாப் உரிமையாளர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ்(52). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒர்க் ஷாப்பில் அருள்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! ஒரு நைட்டுக்கு முன்னணி நடிகைனா ரூ.25,000! துணை நடிகைனா ரூ.10,000!
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அருள்ராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகத்தின்பேரில் ஒர்க் ஷாப் உரிமையாளர் தங்கவேல்(51) என்பவரை பிடித்து விசாரித்தனர். முதலில் இல்லை என்று கூறிய தங்கவேல் பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்த அருள்ராஜின் மனைவிக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த அருள்ராஜ், என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் அருள்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.
இதையும் படிங்க;- அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய மாணவி.. விடாமல் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்.!
அதன்படி கடந்த 11-ம் தேதி இரவு ஒர்க் ஷாப்பில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அவருக்கு தெரியாமல் மதுவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். பின்னர், மயக்கமடைந்த அவரை பிளாஸ்டிக் டேப்பால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன். மறுநாள் காலையில் வழக்கம் போல் ஒர்க் ஷாப்பிற்கு வந்த போது அருள்ராஜ் மர்மமாக உயிரிழந்து கிடப்பதாக கூறி அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்து நாடகமாடினேன் என கூறினார்.