திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை ரூம் போட்டு மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அரவிந்த் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் சேலையூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு பெரம்பூரை சேர்ந்த பாலாஜி (23) என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போது, கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருவரும் சினிமா தியேட்டர், பீச், மால்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்தனர். 

மேலும் படிக்க;-  அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

இந்நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி லாட்ஜில் ரூம் எடுத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாலாஜியை தொந்தரவு செய்து வந்தார். அப்போது, திருமணத்திற்கு முன்பாகவே நீ கர்ப்பம் அடைந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆகையால், கருவை கலைத்து விடுவோம் என மாணவியிடம் பாலாஜி கண்ண கலங்கிய நிலையில் கூறினார். 

மேலும் படிக்க;- எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

இதை உண்மை என்று நம்பி மாணவி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர், திருமண செலவுக்கு பணம் தேவை என்று பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், திருமணம் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்தி வந்தார். திடீரென நமது திருமணத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆகையால், நாம் பிரிந்துவிடுவோம் என பாலாஜி கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி கதறியபடி அவரிடம் தகராறு செய்தார். 

இதனால், ஆத்திரமடைந்த காதலன் பாலாஜி நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாலாஜி மற்றும் அவரது தாயையும் தேடிவருகின்றனர். மேலும், சட்ட விதிகளை மீறி கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.