வயலில் காவலுக்கு இருந்த விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 10 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த வேலந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(49). இவர் கணவரை இழந்த நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி ரகுநாதசமுத்திரம் அருகே உள்ள தனது வயலில் காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க இரவில் காவலுக்கு சென்றிருந்தார் வீடு திரும்பாமல் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார்.

குறித்து பெரணமல்லூர் போலீசில் அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி வேலந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நடராஜன்(36) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பிய நிலையில் நடராஜன் நேற்று முன்தினம் ரெட்டிகுப்பம் விஏஓவிடம் லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று குடிபோதையில் வயலில் தெரிந்த வெளிச்சத்தை நோக்கி சென்றேன். அங்கு லட்சுமி தனியாக அமர்ந்து இருப்பதை கண்டு உல்லாசத்துக்கு அழைத்த போது அவர் வர மறுத்தார். இதனால் நான் வலுக்கட்டாயம் உல்லாசத்திற்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு வந்தேன் என நடராஜன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீசார் நீதுமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.