இந்தியாவில் பெண்கள் நலக்குழுக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்பு குழுக்கள் பல உள்ளன. அவற்றுள் ஒரு குழுவில் பெண்கள் டீம் மிரளவைக்கும் செயலை செய்துள்ளனர். அங்கு பல மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை  பிடித்து சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குஜராத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு,போலீசாரை சுட்டது உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் தான் இந்த ஜுசப் அலஹ்ரகா சந்த்.

இவன் கடந்த ஒரு வருஷமாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்துள்ளான். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இவன் பதுங்கி இருக்கும் இடம் தெரிய வந்தது. அவனை உயிருடன் பிடிக்க அந்த மாநிலத்தின் தீவிரவாதி எதிர்ப்பு பெண் குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள பொடத் மாவட்டத்தில் தேவ்தாரி என்னும் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களில் AK-47 ரக துப்பாக்கி எடுத்துச் சென்ற 4 பெண்கள் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதனையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்த ஜுசப் அலஹ்ரகாரை பிடித்து சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.