சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் 62 வயதான தந்தையை கொலை செய்திட, அவரது மகளே கூலிப்படையை ஏவிய சம்பவம், அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 62 வயதான தேவசகாயம் வணிக கப்பல்களில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவியின் மறைவிற்கு பிறகு மகள் லதா மற்றும் மருமகன் பாபு இவருடன் தான் தங்கி இருக்கின்றனர்.இதனிடையே தேவசகாயம் அவரது வீட்டில் சிறுவயது முதலே வேலை பார்த்து வரும் சித்ரா(45) எனும் பெண்ணுடன் அதே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார். 

தேவசகாயத்தின் இந்த நடவடிக்கைகள் அவரது மகள் மற்றும் மருமகனுக்கு பிடிக்கவில்லை. மகள் மருமகன் இருக்கும் இந்த வீட்டிலேயே அந்த வேலைக்காரப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். மேலும் இந்த உறவினால், அந்த அந்த வேலைக்காரியின் பேச்சைக் கேட்டு தங்களை தேவசகாயம் இந்த வீட்டை விட்டு துரத்திவிடுவாரோ? எனவும் பயந்திருக்கின்றனர், அவரின் மகள் லதாவும் மருமகன் பாபுவும்.  இதனால் லதாவும் அவர் கணவனும் சேர்ந்து தேவசகாயத்தை கொலை செய்திட கூலிப்படைக்கு பணம் கொடுத்திருக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, கடந்த வியாழன் அன்று வீட்டு வாசலில் வைத்து பேப்பர் படித்து கொண்டிருந்த தேவசகாயத்தை, 8 பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறது.
தேவசகாயத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தொடந்து தேவசகாயத்தின் மகளும் மருமகனும் தலைமறைவாகி இருக்கின்றனர். இந்த கொலை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் காவல் துறை, சம்பந்தப்பட்ட இருவரையும் தீவிரமாக தேடிவருகிறது.