சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த உதயகுமார் மன்னார்குடியை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவியுடனான சில கருத்து வேறுபாட்டால் டைவர்சும் ஆகியதால் 2வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மேட்டர்மோனி மூலமாக மகாலக்ஷ்மி என்ற பெண்ணை பார்த்துள்ளார். திருச்சியை சேர்ந்த அந்த பெண்ணுடன் கடந்த 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது.

இரண்டாவது மனைவியான மகாலக்ஷ்மியோடு கொஞ்ச நாள்  சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திவிட்டு, மறுபடியும் வேலை விஷயமாக திரும்பவும் உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  தான் கர்ப்பமாக இருப்பதாக போனில் கணவர் உதயகுமாருக்கு மகாலட்சுமி சொன்னார். அப்பாவாக போகிற சந்தோஷத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்பதால் சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்துவிட்டார்.

மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவனுக்கு  அதைவிட பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. கர்பமாக இருந்ததாக சொன்ன மனைவி  மகாலட்சுமி வீட்டில் இல்லை. மனைவியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, சிங்கப்பூருக்கு சென்ற சில நாட்களிலேயே வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் வாரி சுருட்டி கொண்டு மகாலட்சுமி எப்போதோ கிளம்பி போய் விட்டதாக சொன்னார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார், தெரிந்த இடங்களில் மகாலட்சுமியை தேடினார்,  இதனைத்  தொடர்ந்து மனைவியை காணோம் என்று போலீஸீல் புகார் கொடுத்தார். இதனையடுத்து, ஒருநாள் மனைவி மகாலட்சுமியின் ஃபேஸ்புக் பார்த்தபோது, பல  ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்பது தெரியவந்தது.

அதுமட்டுமல்ல, பல பேரிடம் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என சொல்லியதுடன்,  செஃஸியான வார்த்தைகளையும் பதிவிட்டு இருப்பதை கண்டு உதயகுமார் உறைந்துபோனாராம். அது  மட்டுமல்ல, கல்யாண மோசடி பண்ண மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 ஆண்களுடன் கல்யாணம் ஆகி உள்ளது, 6 மாசத்துக்கு ஒரு கல்யாணம், அவர்களால் உருவான கருவை கலைத்தும். பிறகு உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் நோக்கத்தில்  ஜோடியாய் பல ஆண்களுடன் இருக்கும் போட்டோக்களை பார்த்து தலை சுற்றிப் போனாராம் உதயகுமார்.

இதனை அடுத்து, தன்னை போலவே 15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும், அவரிடமிருந்து தனது பணம், நகைகளை மீட்டு தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளதற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அப்பா இல்லை என்று சொன்னதால், ரொம்ப அக்கறை காட்டினேன். முதல் புருஷன் கர்ப்பத்தை காலால் எட்டி உதைத்து கலைத்ததாக புகார் கூறி, விவாகரத்தும், பணமும் ஏமாற்றியிருக்கிறார். இதேபோல டெக்கினிக்கை பயன் படுத்தி 15 பேரை ஏமாற்றியும், பிளேடால்  கையை அறுத்து தற்கொலை பயம் காட்டியே நகை, பணத்தை ஆட்டையை போட்ட மகாலட்சுமி,  கணவர் உதயகுமார் மேலேயும் அதே புகார் கொடுத்துள்ளாராம்

அதுமட்டுமல்ல மகாலட்சுமி ஏமாற்றியது தொடர்பாக கோர்ட்டுக்கு போக இருக்கிறாராம் உதயகுமார். தன்னைப்போலவே 15 பேரை ஏமாற்றியதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கிறதாம்.  தற்போது ஆந்திராவில் செட்டிலாகியிருக்கும் , இன்னும் எத்தனைபேரை ஏமாற்ற போகிறாளோ தெரியவில்லை. தற்போது யாரோ பெரிய பணக்காரர் மகாலட்சுமிகிட்ட சிக்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன். இனிமே அவளிடம் யாரும் ஏமாற கூடாதுன்றதுக்காக நடவடிக்கை எடுக்கணும் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.