வாணியம்பாடியை சேர்ந்த நளினிக்கும் பெங்களூரை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 3-வது பிறந்த பெண் குழந்தை ரித்திகாவுக்கு ஒன்றரை  வயது ஆகிறது.

இந்நிலையில், கட்டிட மேஸ்திரியாக  இருந்த சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியது. வேலைக்கு செல்லும்  அவர் மேஸ்திரி முரளியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கணவர் சசிகுமார் பார்த்து  கண்டித்துள்ளார். ஆனால் அவர்  நளினி தனது  போக்கை மாற்றிக் கொள்ளவில்லை மேலும், கணவருடன் வாழாமல், ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு, நளினி அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். 

அதுமட்டுமல்ல, தனது கள்ளக்காதலன் முரளியையும் வாணியம்பாடிக்கு வரவழைத்து அங்கு கள்ளக் காதலனுடன் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் குழந்தை அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவது தங்கள் சந்தோஷத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த நளினியும் முரளியும், ஜல்லி கரண்டியால் குழந்தையை பலமாக அடித்துள்ளனர். 

இதையடுத்து குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் சாக்கு சொல்லிவிட்டு இருவரும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு  சென்றுள்ளனர். உடல் முழுவதும் குழந்தைக்கு காயங்கள் இருப்பதை கண்ட டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை எடுத்து செல்ல முற்படும்போது குழந்தைக்கு உடற்கூறு செய்து தான் கொடுக்கப்படும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். குழந்தைக்கு உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்ட நளினியின் தந்தை பாஸ்கரன் குழந்தை இறப்பில் சந்தேகம்  என போலீசில் கொடுத்துள்ளார்.  இதை தொடர்ந்து முரளி மற்றும்  நளினியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குழந்தையை அடித்தே கொன்றதை ஒப்புக்கொண்டனர்.