Asianet News TamilAsianet News Tamil

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்... 12 மணி நேரத்தில் மீட்பு; கடத்திய பெண் கைது!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். 

women arrest who kidnapped baby in tirupur govt hospital
Author
First Published Mar 26, 2023, 11:48 PM IST

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி - சத்யா தம்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை அடுத்து சத்யாவை வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது நான்கு நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் லிப்டில் செல்லும் போது குழந்தையை தான் படியில் எடுத்து வருவதாக கூறி குழந்தையை எடுத்துச்சென்றுள்ளார்.

இதையும் படிங்க: தொழிலதிபருக்கு காதல் வலை வீசி கார், பணம் கொள்ளை; கில்லாடி ஆசிரியை மீது கோவையில் வழக்கு

women arrest who kidnapped baby in tirupur govt hospital

வேறு தளத்திற்கு சென்ற சத்யா குழந்தையை பெண்மணி கொண்டு வராததால் மீண்டும் அதே இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்யாவின் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக தெரிவித்து விட்டு தனது பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறி உள்ளார். ஆனால் குழந்தை மாமியாரிடமும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த சத்யா அலற துவங்கினார். இது குறித்து மருத்துவர்கள் தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் தெற்கு உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இதையும் படிங்க: 73 வயது மூதாட்டி கொலை.. பாலியல் துன்புறுத்தலலுக்கு ஆளானாரா.? சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

women arrest who kidnapped baby in tirupur govt hospital

மேலும் கடந்த 4 நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித்திரிந்த பெண் திட்டமிட்டு குழந்தையை கடத்தி உள்ளாரா என சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்ததில் அவர் இடுவாய், வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பிடித்த போலீசார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் தனக்கு குழந்தை இல்லாததால் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மீட்ட குழந்தையை தாயார் சத்யாவிடம் ஒப்படைத்தனர். 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios