விடிய விடிய போன் பேசிய பெண்... விடிஞ்சதும் தற்கொலை... என்ன நடந்தது?
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே விடிய விடிய போனில் பேசிய இளம்பெண் காலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே விடிய விடிய போனில் பேசிய இளம்பெண் காலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்ணின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிஷா. இவர் சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதை அடுத்து நிஷா தன்னுடன் பணிபுரியும் லோகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து மதுரவாயல் லட்சுமி நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நிஷா யாருடனோ நீண்ட நேரம் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
லோகேஸ்வரி தனது அறைக்கு சென்று தூங்க சென்றிருக்கிறார். இதனை அடுத்து லோகேஸ்வரி காலையில் எழுந்து பார்த்த போது சமையல் அறையில் புடவையில் நிஷா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஸ்வரி, மதுரவாயல் போலீசாருக்கு இதுக்குறித்து தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், நிஷாவின் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.