சென்னையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். இருபத்துநான்கு வயதாகும் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் வேலைக்கு வந்துள்ளார்.

வேலைக்கு வந்த அவர், செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். டேனிதா கீழே விழுந்த அதே வேகத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேனிதா வேலைக்குச் சேர்ந்த ஐடி நிறுவனக் கட்டிடத்தின் 8-வது அடுக்கு, மேல்தளம் என்பதனால், ஊழியர்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து டேனிதா கீழே விழுந்ததால் அவரது மரணம் தற்கொலையா? கொலையா? அல்லது தவறுதலாக கீழே விழுந்தாரா? என்னும் கோணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த விசாரணைன் தொடர்ச்சியாக டேலிதா ஜூலியசின் பெற்றோரிடம் போலீசார் நடத்தினார். அந்த விசாரணையில், டேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் என்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து டேலிதா ஜூலியஸ் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த போலீசார்,  சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறிய போது,  டேலிதா ஜூலியஸ் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து மரணம் அடைந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.