Asianet News TamilAsianet News Tamil

வீடு புகுந்து 17 இடங்களில் கத்தி குத்து... இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.. இளைஞர் வெறிச்செயல்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி வல்சலா. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களது மகள் சூர்ய காயத்ரி(20). இவருக்கும் கொல்லத்தை சேர்ந்த வாலிபருக்கும்  திருமணம் நடந்தது.

woman stabbed 17 times by youth
Author
thiruvanathapuram, First Published Aug 31, 2021, 5:42 PM IST

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து கொடூரமாக 17 இடங்களில் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி வல்சலா. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களது மகள் சூர்யகாயத்ரி(20). இவருக்கும் கொல்லத்தை சேர்ந்த வாலிபருக்கும்  திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சூர்ய காயத்ரி  கடந்த 6 மாதமாக கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 

woman stabbed 17 times by youth

இந்நிலையில், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்(28). இவருக்கும் சூர்ய காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை திருமணம் செய்ய அருண் விரும்பியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டிற்கு நேற்று மாலை  அருண் சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்யுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அருண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்ய காயத்ரியின் வயிறு, நெஞ்சு உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். 

woman stabbed 17 times by youth

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் மீண்டும் கத்தியார் சரமாரியாக குத்தினார். 17 இடங்களில் கத்தி குத்து விழுந்த மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் வல்சலா ஓடி வந்தார். அவரையும் அருண் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சூர்ய காயத்ரி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருணை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios