திருமணத்தன்று ஓடிப்போன மணமகள் ஹரியானாவில் தனது லெஸ்பியன் கூட்டாளியுடன் வசித்து வருவதை கண்டறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம், சஜான்பூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு திருமணமான அந்த பெண் வீட்டில் இருந்து திடீர் என காணமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தன் மனைவியை காணவில்லை என கணவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். காணாமல் போன 23 நாட்களுக்கு பின்னர், காவல்துறையினர் விசாரணையில் அவரது மனைவி ஹரியானா மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அங்கு அவரது தோழியுடன் தங்கியிருந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. 

இந்த பெண்ணும் அவரது தோழியும் திருமணத்திற்கு முன்பே ஒரினர் சேர்க்கையாளராக இருந்து வந்துள்ளனர். இருந்தாலும் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருடன் வாழ விரும்பாமல் மீண்டும் தனது தோழியுடனேயே வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

 

இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. அதில் இரண்டு பெண்களும் தாங்கள் 18 வயதை கடந்தவர்கள். அதனால் நாங்கள் செய்வது எங்களுக்கு சரியானது என வாதிட்டனர். இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.