ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நடுரோட்டில் வீசிய சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி அருகே உடை கிழிந்த நிலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அந்த இளம்பெண் அளித்த புகாரில் பேருந்துக்காக காத்திருந்தபோது அந்த இளம்பெண்ணுக்கு அவ்வழியே காரில் வந்த நபர் லிப்ட் கொடுத்து ஏற்றி சென்றனர். அப்போது, இரண்டு நபர்கள் காரில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசி விட்டுச் சென்றதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வசம் இருந்த ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையும்  நடைபெற்று வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாட்டியே உலுக்கியது நிலையில் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.