திருமணத்தை மீறிய உறவு: தங்கை மகனுடன் சேர்ந்து லாரி டிரைவரை போட்டுத் தள்ளிய பெண்!

கிருஷ்ணகிரி அருகே திருமணத்தை மீறிய உறவு காரணமாக லாரி டிரைவரை தங்கை மகனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

Woman murder lorry driver join hands with sister son on illegal relationship

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொலதாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (39). அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். மகாதேவபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40). லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். ஜோதியின் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவியை பிரிந்த வெங்கடேஷ் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த உறவு, ஜோதியின் தங்கை மகன் ஹரீஷ் என்பவருக்கு தெரியவர, முறையற்ற இந்த உறவு குறித்து அவர் கண்டித்துள்ளார். இதனால், தனது வீட்டுக்கு வர வேண்டாம் என்று வெங்கடேஷிடம் ஜோதி கூறியுள்ளார். ஆனாலும், வெங்கடேஷ் அவரது வீட்டுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது.

உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்து கொலை; மனைவி, மகன் வெறிச்செயல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் வழக்கம்போல் ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரீஷ் வெங்கடேஷுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் சண்டை முற்றவே, ஜோதி, ஹரீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால், ஜோதி, ஹரீஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதி, ஹரீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios