தெலங்கானா மாநிலம், மிரியால கூடாவை சேர்ந்தவர் தேசாநாயக், தெலுங்கானா தலைமை செயலக த்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி . இவர் பணி நிமித்தமாக தேசாநாயக் மனைவியுடன் ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில்  குடும்பம் நடத்தி வருகிறார்.

பத்மா தனது கணவரை கொலை செய்து அவரது அரசு வேலை மற்றும்  இன்சூரன்ஸ் பணத்தை வாங்குவதற்கு  ப்ளான் போட்டு வந்துள்ளார். இதற்காக கார் டிரைவர் வினோத்தை துணையாக வைத்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  தேசாநாயக்கை கழுத்து நெரித்து கொலை செய்தார். பின்னர் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் தேசாநாயக் இறந்ததாக போலீசாரை நம்ப வைத்தார். 

இதுகுறித்து வனஸ்தலிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தேசாநாயக்கின் உடலில் காயங்கள் இருப்பதை வைத்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பத்மா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடைபெற்றது. 

அப்போது, பத்மா, தனது கணவரின் அரசு வேலை மற்றும்  இன்சூரன்ஸ் பணத்தை வாங்குவதற்காக பெறுவதற்காக டிரைவர் வினோத்துடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து டிரைவர் வினோத்தையும் பத்மாவையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் அரசு வேலை மற்றும்  இன்சூரன்ஸ் பணத்திற்காக அவரது மனைவியே  ப்ளான் போட்டு கொலை செய்து நாடகமாடிய சம்பவம்  அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.