சென்னை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தில் வசிப்பவர் மாணிக்கம். 47 வயதான இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும் சத்யா என்ற 20 வயது மகளும் உள்ளனர். சத்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சதீஷ் என்பவர் சத்யாவை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: 11 ஆயிரம் கட்டினால் 1 லட்சம்.. ஒரே மாதத்தில் 450 பேருக்கு கோவிந்தா போட்ட கோவிந்தராஜன்.. 45 லட்சம் அபேஸ்.

இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு சதீஷ் கேட்டுள்ளார். அதற்கு சத்யா மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். இதில் சத்யா ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சத்யாவின் உடலை மீட்ட ரயில்வே போலீஸார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றன்ர். மேலும் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரயில்வே போலீஸார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.