வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை அரிவாளாள் பெண் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம், உமரி ஹா கிராமத்தில், குடிபோதையில் ஒருவர் நள்ளிரவில் பக்கத்து வீட்டிற்குள் திடீரென நுழைந்தார். அப்போது, ஆழ்ந்து தூக்கிக்கொண்டிருந்த தாயும், 13 வயது மகனும் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். இதனையடுத்து, அந்த பெண் கூச்சலிட்ட போது குடிபோதையில் இருந்த நபர்  அந்த பெண்ணின் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

இதனையடுத்து, 20 நிமிட போராட்டத்தில், அந்த பெண் படுக்கை அருகே இருந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்தார். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த நபர் மயங்கி விழுந்தார். அந்த பெண், கையில் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், நடந்தவற்றை கூறி அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பல பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபரின் புகாரின் பேரில் அந்த பெண் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பலாத்காரம் செய்ய முயன்றவரின் மர்ம உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.