Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - காவல்துறை விசாரணை

மதுரை மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

woman commits suicide in govenment bus in madurai district
Author
First Published Apr 13, 2023, 1:07 PM IST

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசன் கோவையில் பணிபுரிந்து வருகிறார். நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். 

அதன் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார். அப்போது மையிட்டான் பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியதாக தெரிகிறது. 

இதனால் வேதனையடைந்த நாகலட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு நகர பேருந்தில் சென்றார்.

கந்துவட்டி கொடுமையால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

பேருந்து சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பத்தை பார்தது பேருந்தில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர். படுகாய மடைந்து நாகலட்சுமி அங்கிருந்த திருமங்கலம் அரசு மருததுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆட்சியரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். 

திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது

அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளார்க் தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார். இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios