கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் சுரேஷ். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 வருஷமாக சத்தியமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் லாரி கிளீனராக உள்ளதால் இவர் அடிக்கடி வெளியூர் போய் சென்றுவிடுவாராம்..

இந்நிலையில், நேற்று வெகு நேரமாகியும் தேவியின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளனர். வீட்டிர்க்குள் கழுத்து அறுப்பட்ட நிலையில் தேவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் வீட்டு முன் அந்த பகுதி மக்கள் திரண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தப்படி வெளியே ஓடி வந்து நின்றது.

மேலும், கைரேகை நிபுணரும் வரவழைக்கப்பட்டு கொலையாளியின் கை ரேகையை பதிவு செய்தார். தேவி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஒரு தாலி (மஞ்சள்) கயிறும் சரக்கு பாட்டில்லும் கிடந்தது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தேவிக்கு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் தேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் உறுதியாக தெரியவில்லை. தேவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அந்த வாலிபர் இந்த கொடூர கொலையில் செய்திருக்க கூடும் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? கள்ளக்காதலில் தான் கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனி போலீஸ் படையும் இதேபோல்  புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் இன்னொரு போலீஸ் படையும் என 2 தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்ட கொலையாளியை வலைவீசித் தேடி வருகிறார்கள்.