மது பழக்கத்தால் குடும்பத்திற்கு பணம் தராத கணவன்; விரக்தியில் பெண் குழந்தையை கொலை செய்த தாய்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்திற்கு கணவன் பணம் தராத நிலையில் விரக்தியடைந்த பெண் தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

woman arrested for murder case who kill her own child in tirupur

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாளபட்டியை சார்ந்தவர் சசிகுமார். இவருக்கும் வசந்தி என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமனமானது. திருமனமான சில மாதங்களிலேயே இருவருக்கும் மன கசப்பு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். குடிப்பழக்கத்கிற்கு அடிமையான சசிகுமார்  வேலைக்கு செல்லாமல்  இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வசந்தி கருவுற்ற நிலையில் கடந்த மாதம் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குடிப்பழக்கத்தால் வீட்டிற்கு சசிகுமார் பணம் தராத நிலையில் வருங்காலத்தில் பெண் குழந்தையை எப்படி காப்பாற்றப் போகிறோம் என மனக்குழப்பத்தில் இருந்து வந்த வசந்தி தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு கைதவறி விழுந்து விட்டதாக நாடகமாடியுள்ளார்.

லெஸ்பியன் மோகத்தால் இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த குடும்ப பெண்; பரிதவிப்பில் 3 குழந்தைகள்

இந்நிலையில் குழந்தை இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்குவந்த காவல்துறையினர் வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரிடமும் குழந்தை தவறி தண்ணீரில் விழுந்துவிட்டதாகக் கூறிய வசந்தி ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வசந்தியின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த தளி காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கோதையாறு அணை பகுதியில் உல்லாசமாக உலா வரும் அரிகொம்பன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios