உத்தரபிரதேச மாநிலம் பரேலியில், பணத்துக்காக தன்னை விபச்சாரத்தில் தள்ளுவதாக கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில், பணத்துக்காக தன்னை விபச்சாரத்தில் தள்ளுவதாக கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சுபாஷ் நகர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மீது புகார் அளித்தார். அவரது புகாரில், எங்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்குப் பிறகு தான் எனது கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. அவர் எனது பெற்றோர்கள் வரதட்சணையாக கொடுத்த பணம் முழுவதையும் சூதாடி அழித்தார். இதுமட்டுமின்றி எனது கணவர், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மதுபானம் வாங்க கடன் வாங்குவார்.

என்னை அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்வார். மேலும் ஆண்களை வீட்டிற்கு வரவழைத்து, என்னை அடித்து காயப்படுத்தி அவர்களுடன் நெருங்கி பழகும்படி வற்புறுத்துவார். வீட்டிற்கு வந்த ஆண்கள் என்னை அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தும் போது என் கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அறைக்கு வெளியே அமர்ந்து மது அருந்துவார். அவரது நண்பர்கள் மற்றும் பலரிடம் பணம் வசூலித்து, அவர்களுடன் என்னை நெருங்கி இருக்கும்படி கூறி விபச்சாரத்தில் தள்ளுவார் என்று தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் கண்வர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் வரதட்சணைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ, சட்ட மற்றும் உளவியல் ஆதரவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ‘ஒன் ஸ்டாப் சகி மையங்கள் (OSCs) மூலம் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
