சென்னை  3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்ற கணவனை, அவரது மூன்றாவது சம்சாரம் காட்டிக்கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, வரவேற்கும் வேலைக்கு பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் கேரளாவில் உள்ளனர்.இந்த நிலையில், மூன்றாவதாக தேவிகா என்பவரை கல்யாணம் செய்து  சாலிகிராமத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

இந்த நிலையில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் தேவிகா புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார்.அதன்பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் அஜித்குமாரை அழைத்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது வர்களுக்கு ஷாக் தகவல் கிடைத்தது. அதாவது ஏற்கனவே 3 பெண்களை கல்யாணம் செய்த அஜித்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 3 மனைவிகளுக்கு தெரியாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு, நான்காவதாக அந்த பெண்ணை கல்யாணம்  செய்து கொள்ள அஜித்குமார் பிளான் போட்டு வந்துள்ளது தெரிகிறது.

இதனையடுத்து, ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து மோசடியில் ஈடுபட்டு 4–வது திருமணம் செய்ய முயன்ற அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, அஜித்குமாரை ஜாமீனில் விடுவதாக போலீசார் தெரிவித்தனர்.