திருமணம் நடந்த ஒரு சில மாதங்களிலேயே கணவனை பிரிந்த பெண் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருமணம் நடந்த ஒரு சில மாதங்களிலேயே கணவனை பிரிந்த பெண் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த திரிசூலத்தில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (55) சென்னை மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் முத்துலட்சுமி, வயது (27) இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மணி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் திருமணமான 6 மாதத்திலேயே கணவன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று திடீரென முத்துலட்சுமி நேற்று முன்தினம் காணவில்லை, அவரது பெற்றோர்கள் முத்துலட்சுமியை அக்கம்பக்கத்தில் தேடினர் எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் காணவில்லை என வழக்கு பதிவு செய்து முத்துலட்சுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திரிசூலத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் பெண் ஒருவரது உடல் இறந்த நிலையில் மிதப்பதாக தகவல் வந்தது . அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் தாம்பரம் சானிடோரியம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அது காணாமல் போன முத்துலட்சுமி என தெரிந்தது, பின்னர் மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர், பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனை அனுப்பி வைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பிறகு இன்று காலை தனது நகைகளை எல்லாம் கழற்றி பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு அருகில் உள்ள கல்குவாரியில் முத்துலட்சுமி குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. கணவனைப் பிரிந்து இருந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.