செங்கல்பட்டு நகராட்சி குப்பை கிடங்கு அருகே நேற்று மாலை  ஒரு வாலிபர், கொடூரமாக வெட்டப்பட்டு  உதவி கேட்டு  சத்தம் போட்டுள்ளார். அந்த சமயத்தில், அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த  போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து 5 பேர் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர். உடனே போலீசார், ஆட்டோவை விரட்டி சென்று, அதில் இருந்த 2 பேரை  பிடித்தனர். 

பின்னர், 2 பேரையும் காவல்  நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதற்கிடையில், பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணையில் சென்னை T.நகர், தாமஸ் ரோட்டை சேர்ந்த மதன். இவரது மனைவி ரேகா அடிக்கடி ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். சென்னை துரை பாக்கத்தைச் சேர்ந்த  ஹரி என்பவர். தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார்.

ரேகா, ஆன்லைனில் புக் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும்போது, ஹரிக்கு ரேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. டெலிவரி கொடுக்கவரும் ஹரி ரேகாவோடு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.  இந்த விஷயம் அறிந்த மதன்,  மனைவி ரேகாவையும், கள்ளக் காதலன் ஹரியையும் கடுமையாக கண்டித்துள்ளார். 

ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை, இவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்தது.  இந்த தொடர்பை பல நாட்களாக கண்காணித்த மதன், கள்ளக் காதலன் ஹரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்காக திட்டம் தீட்டி, தனது நண்பர்கள் ராமு, பழனி உள்பட 4 பேருடன் ஒரு ஆட்டோவில் நேற்று மாலை கள்ளக் காதலன் ஹரியை  ஆட்டோவில் கடத்தி கொண்டு செங்கல்பட்டு குப்பை கிடங்கு அருகில் அழைத்து சென்று, அரிவாளால், ஹரியை சரமாரியாக வெட்டியது தெரிந்தது.

இதற்கு முன்னதாக, தரமணி காவல் நிலையத்தில் ஹரி காணமல் போனதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். அதன்பேரில், தரமணி போலீசார், பிடிபட்ட 2 பேரையும் நேற்று இரவு, அழைத்து  சென்றனர். மேலும், ஆட்டோவுடன் சென்ற ஒருவரை, பல்லாவரம் அருகே கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர்.