கள்ளக்காதலுக்காக ஓடும் ரயிலில் இருந்து கணவனை கீழே தள்ளி கொலை செய்ய  சதித்திட்டம் தீட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்,  அதற்கு உடந்தையாக இருந்த  கள்ளக்காதலனுடன் மேலும் இருவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.   சென்னை ஆவடியில் சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன்,  இவருக்கு அஸ்வினி என்ற மனைவி இருந்து வருகிறார்,  திருமணமாகி பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,  அஸ்வினுக்கு பக்கத்து ஏரியாவை சேர்ந்த அனுராக்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது ,  அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர் .  அஸ்வினி அடிக்கடி  கள்ளக் காதலனை சந்தித்து  உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது .  இந் நிலையில் மனைவியின்  நடவடிக்கையில்  கணவன் ராஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

காலையில் வேலைக்குச் செல்லும் அஸ்வினி மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு தாமதமாக வருவது ,  வீட்டிற்கு வந்தவுடன் பல மணி நேரம்  செல்போனில் பேசுவது என இருந்ததை கண்டு கணவருக்கு சந்தேகம் வலுத்தது .  இதையடுத்து அஸ்வினியை பின்தொடர்ந்து சென்று பார்த்ததில் அவர் ரயிலில் ஒரு இளைஞருடன் சிரித்துப் பேசி கொஞ்சி குலாவினார் அதைக்  கண்டு கணவர் ராஜேந்திரனுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.   பின்னர் வீட்டுக்கு வந்த மனைவியை  ரயிலில் வந்த இளைஞர் யார் என கேட்டு ராஜேந்திரன்  தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அவர் தன்னுடன் வேலை செய்யும் நபர் என்றும் ,  தனக்கு அவர் சகோதரர் போல எனவும் கூறி  கணவனை  சமாதானப்படுத்தினார், ஆனால்  மனைவி அஸ்வினி தன்னிடம் பொய் சொல்வது ராஜேந்திரனுக்கு தெரிந்துவிட்டது .  இதனால் மனைவியை அவர் கண்டித்துள்ளார் இனி அந்த நபருடன் பேச மாட்டேன் என அஸ்வினியும்  கணவருக்கு வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.  

ஆனாலும்  அஸ்வினியால்  கள்ளக்காதலை கைவிட முடியவில்லை அதனால் தன்னுடைய கணவன் தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக  இருந்து வந்த நிலையில் தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார் அஸ்வினி ,  இந்நிலையில் கடந்த 29ம் தேதி தனது ராஜேந்திரன் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு நல்ல புத்தி கொடுக்கும்படி வேண்ட  திருத்தணி கோவிலுக்கு சென்றுள்ளார்,  ஏற்கனவே சமயப் பார்த்து காத்திருந்த மனைவி,  இதைக் கேள்விப்பட்டவுடன்,   தன் கணவர் ரயில்வே செல்வதாகவும் இப்போது சென்றால் அவரை தீர்த்துக் கட்டிவிடலாம் எனவும்  தனது கள்ளக் காதலனுக்கு தொலைபேசியில்  தெரிவித்துள்ளார் இதனையடுத்து  கணவன்  ராஜேந்திரனை பின் தொடர்ந்த  கள்ளக்காதலன் அனுராக் தன்னுடன் வந்த இருவருடன் சேர்ந்து ஓடும் ரயிலில் இருந்து ராஜேந்திரனை கீழே தள்ளியுள்ளார்,  அதில் ரயில் வேகம் குறைவாக இருந்ததால் ராஜேந்திரன் அதிஷ்டவசமாக   பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். 

 

இந்நிலையில் கீழே விழுந்து  காயங்களுடன் கிடந்த ராஜேந்திரனை  போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்,  பிறகு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனைவியை பிடித்து விசாரித்ததில் தன் கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனை தீர்த்துக்கட்ட அவர் திட்டம் போட்டது தெரியவந்தது இதனையடுத்து  மனைவி அஸ்வினி மற்றும் கள்ளக்காதலன்  அனுராக் மற்றும் அவருடன் வந்த இரண்டு இளைஞர்ளை  போலீசார் கைது செய்து  பின் சிறையில் அடைத்தனர்.