கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவியை கொலை செய்து மறைத்து வைத்த நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றுள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்குமார் ஸ்மிதா பேபி இருவருக்கும் தகாத உறவு இருந்திருக்கிறது இதற்கு பிரேம்குமாரின் மனைவி வித்யா தடையாக இருந்திருக்கிறார் கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை அடித்து கொலை செய்து மறைத்து வைத்து நாடகமாடி  வந்திருக்கிறார்கள் .  இந்நிலையில் கேரளா போலீசார் பிரேம் குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி சுமித்தா பேபியை கைது செய்துள்ளனர். 

கள்ளக்காதலியுடன் வாழ முடிவு செய்து அதனால் மனைவி வித்யாவை கொலை செய்ததாகவும் கொலையை மறைக்க திரைப்பட பாணியில் செயல்பட்டதாகவும்  வாக்குமூலம் அளித்துள்ளனர் வித்யாவை தீர்த்துகட்ட முடிவு செய்த கள்ளக்காதலர்கள் இருவரும் மனைவி வித்யாவை தொலைபேசியில் அழைத்து தனியாக ஒரு வீட்டிற்கு வரவழைத்தனர் , அவர்கள் வலுக்கட்டாயமாக அவரது வாயில் மது பானத்தை ஊற்றி குடிக்க வைத்துள்ளனர் .  முதலில் மயக்கமடைந்த அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன் திருநெல்வேலி  வள்ளியூரில் உள்ள ஒரு கட்டிடத்தில் யாருக்கும் தெரியாமல் உடலை வீசி சென்று விட்டனர் . 

இச் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து பிரேம்குமார் தனது மனைவி காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . இந்நிலையில் வித்தியாவின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து அதை எக்ஸ்பிரஸ்  ரெயில் ஒன்றில் வீசி எறிந்துள்ளனர்.  இந்நிலையில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார் அதில் பிரேம்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதில்  பிரேம்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர் மற்றும் அவரது செல்போன்களை ஆராய்ந்தபோது போலீசாருக்கு உண்மை என்னவென்று தெரியவந்தது .

 

கள்ளக்காதலி சுனிதா பேபியிடம்  அடிக்கடி பேசியதும்,  வித்தியாவை கொலை செய்தது தொடர்பாக இருவரும் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகளையும் ஆதாரமாக வைத்து பிரேம்குமாரை விசாரிக்க வேண்டிய விதத்தில்   விசாரித்தனர் ,  அதில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து வித்யாவை தீர்த்துக்கட்டியதை பிரேம் குமார்  ஒப்புக்கொண்டார் .  பள்ளித் தோழியான சுனிதா பேபியை  பள்ளி ரீயூனியனில் 25 ஆண்டுகள் கழித்து சந்தித்ததாகவும்,  அவருடன் வாழ முடிவு செய்து மனைவியின் அனுமதி பெற்று , சுனிதாவுடன் வாழ்ந்ததாகவும்,  பிரேம்குமார் தெரிவித்துள்ளார் . 

தனக்காக தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு மும்பையில் தான் செய்து வந்த செவிலியர் வேலையையும் விட்டு திருவனந்தபுரத்துக்கு தனக்காக  சுனிதா வந்ததாகவும்  பிரேம்குமார் விசாரணையில் தெரிவித்தார் .  ஆனால் திடீரென வித்தியா தங்களை கண்டித்ததால் அவரை கொலை செய்து  நாடகம் ஆடியதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர் . இந்நிலையில் கொலை மற்றும் கொலையை மறைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.