டிக்டாக்கில் மற்றொரு ஆணுடன் ஆபாசமாக ஆடியதால் கணவனே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கரூரிர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டத்தை சேர்ந்தகூலித்தொழிலாளி சிவசங்கரன் இவரது மனைவியின் பெயர் சூரியகாந்தி,  இருவருக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது, இவர்களுக்க இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர், கணவன் காலை 10 மணிக்கு மேல் வேலைக்கு சென்றுவிடுவார், வீட்டில் மனைவி தனியாக இருப்பதால் அவருக்கு போர்அடிக்குமே  என்பதால் மனைவிக்கு  சிங்சங்கரன் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். வீட்டில் தனியாக இருந்துவந்த சூரியகாந்தி ஒரு கட்டத்தில் கைப்பேசியில் புகுந்து விளையாட ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் டிக்டாக் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பாட்டுபாடுவது, நடனம் ஆடுவது என்றிருந்த அவருக்கு, சிலமாதங்களுக்கு முன்பு  முசிறியைச் சேர்ந்த சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது,  சக்திவேலும் நெருக்கமான சூரியகாந்தி ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து, காதல் வசனங்கள் பேசுவது, ஆபாசமான நடனம் ஆடுவது என்று பொழுதை கழித்துவந்தார், சூரியகாந்தியும் சக்திவேலும் டிக்டாக்கில் அடித்த லூட்டி கணவர் சிவசங்கரனின் காதுக்கு வந்தது , மனைவி மற்றொரு ஆணுடன் ஆபாசமாக ஆட்டம் போடும்  காட்சிகளை செல்போனில் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

இனி செல்போன் பயன்படுத்தக்கூடாது, என்று கட்டுபாடு போட்டதுடன் டிக்டாக் சக்திவேல் எப்படி பழக்கம் என  கேட்டு மனைவியை அவர் குடைந்ததாக தெரிகிறது, இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது ஒரு கட்டத்தில் மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாலே என்ற விரக்தியில் ,மனைவி சூரியகாந்தி தூங்கும்போது அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார் சிவசங்கரன், பின்னர் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் சாக்குபையில் மூட்டைக்கட்டி, சூரியகலாவின் சடலத்தை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு என்ற இடத்தில் வீசினார். பின்னர் தன்மனைவியை காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் நாடகமாடிய சிவசங்கர். ஒரு கட்டத்தில் போலீஸ் விசாரணையில் சிக்கினர், டிக்டாக் நண்பர் முசுறியைச் சேர்ந்த சக்திவேலுடன் தன் மனைவி ஒடியிருக்கலாம் என்று  சிவசங்கர் கூறியதைக்கேட்டு  போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது, பின்னர் சிவசங்கரை தங்கள் பாணியில் அவர்கள் விசாரித்ததில் மனைவியை நான்தான் கொன்றேன்  என சிவசங்கர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.