புழல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் இவருக்கு சொந்தமான வீட்டில் வெற்றி வீரன் வயது 48 என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். வெற்றி வீரன் பாடியில் உள்ள  தனியார் அச்சகத்தில்  பணிபுரிந்து வந்தார் அவரது மனைவி சஞ்சனி வயது 39 இவர்களுக்கு திருமணமாகி 21 வருடம் ஆகி  மணிமொழி 19 சிந்துஜா 17 ஆகிய இரு மகள்கள் உள்ளனர் இவர்கள் அருகில் உள்ள கல்லூரியில் பயின்று வருகின்றனர் . 

கணவன் மனைவிக்கு அவ்வப்போது குடும் பிரச்சணை காரணமாக சண்டை  இருந்து வந்த காரணத்தினால் கடந்த ஆறு வருடமாக மனைவி சஞ்சனி அவரது தாயார் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். மகள்கள் தந்தையிடம் இருந்து வந்தனர்
இந்நிலையில் வெற்றிவீரன் மனைவியின் பிரிவு தாங்காமல் சஞ்சனியை சமாதானப்படுத்தி கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார் வெற்றிவீரன். இந்நிலையில்  மறுபடியும் நேற்று இரவு முதல் மீண்டும் குடும்ப சண்டை தொடரவே இருவரும்  தகராறில் ஈடுபட்டனர் . அதிகாலை வரை இவர்களின் சண்டை தீராததால்  ஆத்திரம் கொண்ட கணவன் வெற்றிவீரன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின்  வயிற்றில் ஓங்கி குத்தியதில் குடல் சரிந்து கீழே சஞ்சனி விழுந்தார். அதன் பிறகும்  ஆத்திரம் அடங்காத  வெற்றி வீரன்,   சரமாரியாக வயிறு மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலமாக கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து சஞ்சனி இறந்தார். 


மனைவியில் அலறல் சத்தத்தால் அருகில் உள்ளோர் புழல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர், ஆனால்  அதற்குள் வெற்றி வீரன் புழல் காவல்நிலையத்தில் தாமாகவே சென்று  சரணடைந்தார் .  
 உடலை கைப்பற்றிய  போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெற்றி வீரனை காவல் நிலையத்தில் வைத்து போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது