தன் பிள்ளைகளுடன் சேர்ந்து மனைவி,  கணவனை அடித்துக்  கொன்று தன் வீட்டிற்குள் புதைத்து நாடகமாடிய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் சுப்புராஜ், இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும்,  சுரேஷ் மற்றும் பிரியா என்ற மகன், மகள் உள்ளனர்.  கூலி வேலை செய்து வந்த சுப்புராஜ் குடிப்பழக்கம் உடையவர் ஆவர்.  இவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து காணவில்லை . இதனால்  தன் அண்ணன் சுப்புராஜ் எங்கே என அவரின் சகோதரர் மனைவி பச்சையம்மாள் மற்றும் பிள்ளைகளிடம் கேட்டுவந்தார்.  ஆனால் அவர்கள் முறையான பதில் கூறவில்லை. ஆனாலும் காணாமல் போன அண்ணன் குறித்து தொடர்ந்து அவரது சகோதரர் தேடிவந்த நிலையில் பச்சையம்மாள் மற்றும் பிள்ளைகளுடைய நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் தன் சகோதரரின் வீட்டை அவர் ஆராய்ந்தார்.  அங்கு புதிதாக மண் தோண்டப்பட்டு அது மூடப்பட்டிருந்தது கண்டு சந்தேகமடைந்த அவர். இங்கு எதற்காக மண் தோண்டப்பட்டது என  அண்ணன் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கேட்டுள்ளார்.  ஆனால் அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால்  அவருக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து தன் அண்ணன் மாயமானதில் சந்தேகம் இருப்பதாக அவர்  சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  உடனே அங்கு வந்த போலீசார்  சுப்புராஜின் சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் வீட்டிற்குள் தோண்டிப் பார்த்தனர்.  அதில்  மக்கிய நிலையில் சடலமொன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அவரை சகோதரரும் இது காணாமல் போனதாக கூறப்படும் தன் சகோதரர்தான் என்று அடையாளம் காட்டினார்.

இதுநாள் வரை கணவர் காணாமல் போய்விட்டார் எனக்கூறி பச்சையம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆடிய நாடகம் அம்பலமானது.  பிறகு பச்சையம்மாள் மற்றும் அவரது பிள்ளைகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார். அவர்களிடம் விசாரித்ததில்.  கடந்த மூன்று மாதத்துக்கு முன்பாக கணவர் சுப்புராஜ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும்,  வீட்டிற்கு வந்து தாய் பச்சையம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்ததால் அவரை பிடித்து கீழே தள்ளியபோது அவர்  நிலை தடுமாறி மயங்கி விழுந்து இறந்து விட்டார்.  இதனால் அவரை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விட்டதாக போலீசுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மனைவி பச்சையம்மாள்,  மகன் சுரேஷ்,  மகள் பிரியா ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மனைவியே தன் பிள்ளைகளுடன் சேர்ந்து  கணவனை அடித்துக் கொன்று  நடுவீட்டில்  புதைத்துவிட்டு  காணவில்லை என நாடகமாடியுள்ள சம்பவம்  சாத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.