சிவகாசியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிகர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சரவணகுமார்(24) மனைவி ஜெயலட்சுமி (22) இவர்களுக்கு கயல்விழி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. ஜெயலட்சுமியும் பட்டாசு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், சரவணகுமாருக்கு சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை வீட்டுக்குப் பின்புறம் இழுத்து சென்ற சரவணகுமார் கத்தியால் ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.