கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ தனது கணவனுக்கு பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்தார் ஒரு பெண், ஆனால் கணவன் விழித்துக்கொண்ட கணவன் ஓடோடிச்சென்று போலீசில் புகார் அளித்ததால் மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ தனது கணவனுக்கு பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்தார் ஒரு பெண், ஆனால் கணவன் விழித்துக்கொண்ட கணவன் ஓடோடிச்சென்று போலீசில் புகார் அளித்ததால் மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலை அடிவாரத்தில் உள்ள ஜெ.ஜெ காலனியில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியான முருகேசனுக்கு, பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது.

கணவனின் மீதும், குழந்தைகள் மீதும் பாசமே இல்லாத ஜீவனாக வாழ்ந்த பிரியா, கணவன் முருகேசன் வேலைக்கு போன நேரத்தில் பிரியா வீட்டில் தனியாக இருந்து வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுதம் ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்தவீட்டிற்க்கே வந்து உல்லாசம் . கணவன் வேலைக்கு போன பின்னர் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த  விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம்  முருகேசனுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்பதாகவே இல்லை.

இந்த விஷயம் பல நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கையில், கள்ளத்தொடர்பை  விடுமாறு கூறியும் பிரியா கேட்பதாகவே இல்லை. இதனால் அடித்து திருத்தலாம் என்று நினைத்தார் முருகேசன். தனது சந்தோசத்திற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை செய்ய பிரியா திட்டமிட்டார். 

தனது ஆசை நாயகன் கவுதம் ராஜ் உடன் சேர்ந்து உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் கணவன் முருகேசனை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டார் பிரியா. 

இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை மட்டன் சாப்பிட்டு விட்டு உறங்கப்போன முருகேசனுக்கு பாலில் தூக்கமருந்து கலந்து கொடுத்தார். அப்போது அசந்து தூங்கி நேரத்தில் கத்தியுடன் தயாராக இருந்த கள்ளக்காதலன் கவுதம்ராஜ் கொலை செய்ய முயற்சி செய்த போது, திடீரென கணவன் முருகேசனுக்கு விழிப்பு வந்து விட்டது. 

சுதாரித்துக்கொண்ட முருகேசன், இருவரையும் தள்ளிவிட்டு விட்டு தப்பி ஓடினார். நேராக ராசிபுரம் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று, தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக மனைவி மீதும் ஆசை நாயகன் கவுதம் ராஜ் மீதும் புகார் கொடுத்தார் முருகேசன். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே கத்தியோடு இருந்த கள்ளக்ககாதலன் கவுதம் ராஜையும், கணவனை கொல்ல முயன்ற மனைவி பிரியாவையும் கைது செய்தனர். உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்ய முயன்ற  தற்போது பிரியா சிறையில்   இருக்கிறாராம்.