உயிருக்கு உலைவைத்த ரூ.1000 பொங்கல் பரிசு... மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்..!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Jan 2019, 11:47 AM IST
wife murder
Highlights

மதுரையில் பொங்கல் பரிசு ரூ.1000 தராததால் மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ராஜாத்தியை வெட்டிக்கொலை செய்த கணவர் ராமரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் பொங்கல் பரிசு ரூ.1000 தராததால் மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ராஜாத்தியை வெட்டிக்கொலை செய்த கணவர் ராமரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பணம் 1000 ரூபாயை ராசாத்தி நேற்று வாங்கி வந்தார். வாங்கி வந்த பணத்தில் தனக்கு பாதியை தர வேண்டும் என்று கணவர் கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

 

இதில் ஆத்திரமடைந்த அடைந்த ராமர் வீட்டில் இருந்த அரிவாளால் எடுத்து மனைவியை வெட்டினார். இதில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். அப்போது மனைவியை வெட்டிக் கொலை செய்ததை தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது ெதாடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loader