உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை கணவர் கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் ராமகவுண்டர் தெருவை சேர்ந்தவர் சங்கர்(40) டைல்ஸ் பதிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விமலா (29). இவருமே விவகாரத்து ஏற்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் மதுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கணவர்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு சங்கர் விமலா இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சங்கர், மனைவி விமலாவை  உல்லாசத்திற்கு வரும் படி அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி விமலா தலைமீது அம்மிகல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து தன்னை போலீஸ் விசாரிக்குமே  என்று பயந்த சங்கர், அதே கல்லால் தலையில் அடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காலையில் விடிந்ததும் தூக்கம் கலைந்து எழுந்த சிறுமி தாயை தேடியுள்ளார். அப்போது, ரத்த வெள்ளத்தில் தாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதபடியே வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தாள். குழந்தையை அக்கம் பக்கத்தினர் விசாரித்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தாய், தந்தை ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் இருந்த கணவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, விமலாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.