விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர்  கடந்த கடந்த 2005 ஆம் ஆண்டு சபீனா பானு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. ஜாகிர் உசேன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சபினா பானுவுக்கும் அவரது  எதிர் வீட்டில் வசித்து வந்த டிரைவர் யுவராஜூக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவர் ஜாகிர் உசேனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து நாடு திரும்பிய அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும்  கள்ளக்காதலை விடுவதற்கு சபீனா தயாராக இல்லை. இதனால் கணவன்,  மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபீனா கணவன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். ஜாகீரின் அலறல் சத்தம் கேட்டு உதவ வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜாகீரின் வாக்குமூலத்தை ஆதாரமகா வைத்து சபீனாவையும் அவரளது கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.