புழல் அருகே மனைவியுடன் எற்பட்ட வாய்தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய தலைமை காவலர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழலில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை குத்தி கொலை செய்து தலைமை காவலர் தானும் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் புழல் திருமால் நகர் 6வது தெருவில் வசித்து வந்தவர் நரேஷ். இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், வருண் என்ற 7வயது மகனும் இருந்தனர். நேற்று மாலை மகன் வருண் டான்ஸ் வகுப்பிற்கு சென்ற பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த காவலர் நரேஷ் தனது மனைவி ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததை கண்டு புழல் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்ததில் மனைவியை கொன்றுவிட்டு தலைமை காவலர் நரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இருவரது சடலங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.