Asianet News TamilAsianet News Tamil

நடத்தையில் சந்தேகம்.. கடப்பாரையால் குத்தி மனைவி, மாமியார் படுகொலை..!

திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மற்றும் மாமியாரை ஆட்டோ ஓட்டுநர்  கடப்பாரையால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Wife mother in law murdered.. auto driver absconding
Author
Kallakurichi, First Published Jul 14, 2021, 7:47 PM IST

திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மற்றும் மாமியாரை ஆட்டோ ஓட்டுநர்  கடப்பாரையால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி சரோஜா(50). இவரது மகள் மகாலட்சுமியை(35). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தேவியகரம் கிராமத்தை சேர்ந்த முருகன் (47) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தம்பதிக்கு 2 மகன்களும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர். முருகன் திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 

Wife mother in law murdered.. auto driver absconding

இந்நிலையில், சமீபகாலமாக மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கட்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து மகள் மோனிஷாவுடன்  மகாலட்சுமி தனது தயார் வீட்டுக்கு வந்துவிட்டார். முருகன் தேவியகரத்தில் மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியை சேர்த்து வைக்கக்கோரி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மகாலட்சுமி தனது தாய் வீட்டிலேயே இருந்து வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலையில் மருகன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி மகாலட்சமி, மாமியார் சரோஜா ஆகியோரை கட்டப்பாரையால் கொடூரமாக தாக்கி குத்தியுள்ளார். இதைக் கண்ட மோனிஷா சத்தம்போடவே அவரையும் தாக்கியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது முருகன் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் முருக்கம்பாடி. இந்த கிராமத்தில் நேற்று நள்ளிரவு குடும்பத்தகராறு காரணமாக முருகன் என்பவர் தனது மாமியார் சரோஜா மற்றும் மனைவி மகாலட்சுமி ஆகியோரை கடப்பாரையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.பின்னர் இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடி ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios