இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மனைவி, அரிவாளுடன் போலீசில் சரணடைந்தார்.
இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மனைவி, அரிவாளுடன் போலீசில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் பிரபு (38), மில் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் படத்தை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இதையறிந்த உமாமகேஸ்வரி கணவரிடம் கேட்டுள்ளார். அவள் கர்ப்பமானதால் கைவிட முடியாது.

2வதாக திருமணம் செய்யப் போகிறேன். இஷ்டம் இருந்தால் நீ என்னுடன் வாழ்க்கை நடத்து, இல்லையென்றால் செல்லலாம் என்று கூறியுள்ளார். மேலும், இரவும் குடித்துவிட்டு வந்து பிரபு தகராறு செய்யவே ஆத்திரம் அடைந்த உமாமகேஸ்வரி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் உமாமகேஸ்வரி, அரிவாளுடன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
