Asianet News TamilAsianet News Tamil

உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி குத்திக்கொலை... கணவன் தலைமறைவு!

காலை வேலைக்கு சென்ற மூர்த்தி இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

Wife killed...Husband Absconding
Author
Tamil Nadu, First Published Dec 11, 2018, 4:29 PM IST

திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்க்கின்றனர்.

வேலைக்கு செல்லும் மூர்த்தி தினமும், மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டிப்பது வழக்கம். இதையொட்டி கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் மூர்த்தி, மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோமதி, கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார். Wife killed...Husband Absconding

பின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து, சமரசம் பேசினார். அப்போது, இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறி உறுதியளித்தார். இதையடுத்து தனது கணவரையும், தாய் வீட்டிலேயே தங்கி இருக்கும்படி கூறினார். இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு சென்ற மூர்த்தி இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.Wife killed...Husband Absconding

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு, தாய் ஜோதி ஓடிவந்தார். அவரையும், மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். Wife killed...Husband Absconding

அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்ம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். புகாரின்படி திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூர்த்தியை கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios