கள்ளக்காதலனை அசிங்க அசிங்கமாக திட்டியதால் தூங்கிக்கொண்டிருந்த கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து  கழுத்தை நெறித்துக் கொலை செய்த மனைவியை போலீசார்  கைது செய்தனர்.

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த தென்னரசன், விஜயலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தென்னரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த காவல் துறையினர் தென்னரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதபரிசோதனையின் ரிப்போர்ட்டில் ஆய்வில் தென்னரசன் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டடு கொன்றது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து அவரது மனைவி விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது.

மதுரை வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே தகாத உறவு தவறான தொடர்பு இருந்துள்ளது. தென்னரசன்  வீட்டில் இல்லாத நேரத்திலும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் சரவணன். இந்த தகவலை அக்கம்பக்கத்தினர் சொல்லி தெரிந்த தென்னரசன்,  சரவணனை கண்டித்ததுள்ளார். ஆனாலும் அவரது கள்ளத்தொடர்பை கைவிடுவதாக இல்லை, திரும்பவும் விஜயலட்சுமியோடு தொடர்பில் இருந்துள்ளார். ஒருநாள் கையும் களவுமாக வீட்டிலேயே இருவரையும் பிடித்த தென்னரசன், சரவணனை அய்ங்க அசிங்கமாக திட்டியுள்ளார். தனது கள்ளக்காதலை தன்முன்னால் இப்படி கேவலமாக திட்டுகிறார் என ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, கள்ளக் காதலன் சரவணனுடன் சேர்ந்து தென்னரசனை கொன்றுவிட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கணவன் தூங்கும் நேரத்தை முன்பே தனது காதலனிடம் சொல்லி வைத்திருந்த விஜயலட்சுமி,  கொலை செய்ய பிளான் போட்டு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போதுஆழ்ந்த உறக்கத்தில் இருந்த  தென்னரசனை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக காலையில் அனைவரிடமும் சொல்லி அழுதுள்ளார். ஆனால், அக்கம்பக்கத்தினர் விஜயலட்சுமியை நம்புவதாக இல்லை, ஆனாலும் பிரேதப்பரிசோதனை ரிப்போர்ட்டில் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.