சேலம் அருகே மனைவியை உறவுக்கு அழைத்போது மறுத்தால் அவரது கழுத்தை காலால் மிதித்துக் கொன்ற கணவனை உறவினர்கள் அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மாதேஸ் என்பவருக்கும் சசிகலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாதேஸ் அளித்த வாக்குமலத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் கறி எடுத்து சமைத்து வைத்தனர்.
.வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.
இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.
இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.
இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த மாதேசின் மாமியார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2019, 8:46 PM IST