மனைவியை பிரிந்து வேறோரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த கணவரை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்து அடித்து, துவம்சம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் போத்தகனரில் வசித்து வருபவர் துளசி. இவர் அரசு ஊழியாராக பணியாற்றி வருகிறார். சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக துளசியை விட்டு பிரிந்து சென்ற கணவர் சீனிவாசன் வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளார். இதனால் பதறி போன மனைவி துளசி, கணவர் எங்கு சென்றார் மறுகினார். கணவரை பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அப்போது வேறொரு பெண்ணுடன் தொடர்ப்பு இருப்பது துளசிக்கு தெரியவந்துள்ளது.

 

உடனடியாக,  பீட்பஜாரில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணுடன் சீனிவாஸன் தங்கியிருப்பதை உறுதி செய்த துளசி நேரில் சென்றார்.  உறவினர்களுடன் சென்ற துளசி சீனிவாசனின் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணையும், கணவனையும் சரமாரியாக தாக்கினார். நடுரோட்டிற்கு இழுத்து வந்து  இரண்டு பேரையும் வெளுத்து வாங்கிய பின்னர் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு இருவரையும் இழுத்துச் சென்றார். உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கணவர் மீது புகார் அளித்துள்ளார். கள்ளக் காதலிக்கும், கணவனுக்கும் மனைவி நடத்திய கச்சசேரி வீடியோ வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.