கன்னியாகுமரியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் திருமணமாகி பத்தாண்டுகள் கழித்து தனது 25வது வயதில் இரண்டாவதாக வேறொரு இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை நியாப்படுத்த அவர் கூறிய காரணம் போலீசாரையே திகைப்படைய வைத்துள்ளது. கலியக்காவிலை காஞ்சாம்புறம்,   வயக்காலூரை சேர்ந்தவர் ரமேஷ் குமார்,(39) இவருக்கும் தக்கலை சேர்ந்த பிரீத்தி (25) என்பவருக்கும் கடந்த  2009 ஆம் ஆண்டு  ப்ரீத்தியின் தாயார்  விருப்பப்படி திருமணம் நடைபெற்றது. 

விஷ்ணு தேவ் மற்றும் சமஸ்கிருதா  என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ரமேஷ் குமார் கேட்டரிங் தொழிலுக்காக வெளிநாடு சென்றுவிட்டார், பின்னர் அவர் வருவதற்குள் மனைவி ப்ரீத்தி,  தான் தனியாக வாழ்வதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு  வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அவரசமாக கணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,  இதனால் தக்கலை காவல் நிலையத்தில் ரமேஜ்குமார் புகார் கொடுத்தார்.  இதனையடுத்து போலீசார் பிரித்தியை தேடி கண்டிபிடித்து  விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. 

அதில் தெரிவித்த பிரித்தி,  எனக்கு ரமேஷ்குமாரை சுத்தமாக பிடிக்கவில்லை, தனக்கு திருமணம் ஆனபோது வெறும்  15 வயது என்பதால் எனக்கு பதிவுத் திருமணம் செய்யமுடியாத நிலை இருந்தது. அப்போது அம்மாவும் நானும் பார்ப்பதற்கு ஒரே  தோற்றத்தில் அக்கா தங்களைபோல் இருந்ததால் என வயதை மறைத்து பதிவுத் திருமணம் செய்துவைக்க    சிந்து என்ற என்  அம்மாவின் பெயரில் உள்ள  வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என தெரிவித்தார். அது சிலமாதங்களுக்கு பின்னே கணவர் ரமேஷுக்கு தெரியவந்தது.  இந்நிலையில்தான் மிளகுமூடு பகுதியைச் சேர்ந்த அகில் (28) என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். 

இனி அகிலுடன்தான்  சட்டப்படி வாழப்போகிறேன்.  நானும் ரமேஷும் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி செல்லாது. அது என் அம்மாவுக்கும்  ரமேசுக்கும் நடந்த திருமணமே தவிற, எனக்கும் ரமேசுக்குமான  திருமணம் அல்ல. அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என் அம்மா மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சட்டத்திற்கு புறம்பாக பிறந்த அந்த இரண்டு குழந்தைகளையும் ரமேசிடமே ஒப்படைத்து விட்டேன். என்று பிரித்தி கூறியதை கேட்டு போலீசாரக்கு தலை சுற்றிவிட்டது. இந்த வழக்கில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.